Skip to main content

Department of Fine Arts.jpg

Stage of the Apasuram Drama

“Apasuram” (Non Realistic Play: Abstract Play) was directed by Mr.S.Chandrakumar, Head/ Department of fine Arts, Eastern University and staged on 27.03.2019 in the Nallaiya memorial Hall, Eastern University, Vantharumoolai. This Drama was written by Mr.N.Sundaralingam  

நுண்கலைத்துறையின் தயாரிப்பாகிய திரு.நா.சுந்தரலிங்கத்தின்; 'அபசுரம்' நாடகம் அளிக்கை செய்யப்பட்டது. இதனை நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறிய இந்நாடகத்தினைப் பலரும் பாராட்டி கருத்துரைத்திருந்தனர். இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களில் பொதுவராக அ.சந்திரகுமாரும், அருளராக வி.விக்கினேஸ்வரனும், தியாகராக வி.கிருபானந்தமும், புறொபெசராக பே.நிதாகரும், பிரச்சினையாக அ. ஆன் நிவேத்திகாவும், சிவாயராக ரா.தனஞ்சயனும் நடித்து தம் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். நாடகத்திற்கான எடுத்துச் சொல்லிகள் (நினைவூட்டுபவர்) கு.நிலுஜா, பு.ரதிகலா ஆவர். சு.சந்திரகுமாரின் யதார்த்த விரோதவாத நடிப்புமுறையின் உருவாக்கம் அவரது 'அகட விகடப்' பாத்திரவாக்கத்துடன் வெளிப்பட்டு அபத்த நாடகச்சாயலைத் தந்தமை ஈழத்து அரங்க வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது

Taxonomy