Skip to main content

Department of Fine Arts.jpg

13th SLUG – Sri Lanka University Games - 2019

13th SLUG – Sri Lanka University Games was conducted by University of Ruhuna on 26.08.2019 -07.09.2020 at Matara University. Flag of 14th SLUG – Sri Lanka University Games was officially handover on 07.09.2019 to Prof F.C.Ragel, Vice – Chancellor, Eastern University. Then, Department of Fine Arts performed Tamil Cultural Programme base on traditional theatre of Eastern regional dance and Music on 07.09.2019. This Event was coordinated and trained with composing of traditional dance by Mr.S.Chandrakumar, Head/Fine Arts, and Eastern University. Department of Fine Arts Students, Mr.S.Chandrakumar, Head of the Department of Fine Arts, Mr.T.Gorieeswaran, Lecturer, Mrs. T.Sathiyajith, Lecturer and Ms. K.Kanista, Asistant Tempoary Lecturer. Maththlam was played by P.Kathirkamanathan, Annaviyar and S.Thipan, Annaviyar.

13 ஆவது இலங்கை அனைத்து பல்கலைக்கழக விளையாட்டு விழா – 2019  மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ருகுணு பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 26ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை பிரமாண்டாக நடைபெற்றது. இவ் விளையாட்டு விழாவில் நுண்கலைத்துறையில் சிறப்புக் கற்கை பயிலும் மாணவர்களும் பங்குபற்றியிருந்தார்கள். 

 

14 ஆவது அனைத்து பல்கலைக்கழக விளையாட்டு விழாவானது (14th SLUG – Sri Lanka University Games) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 07.09.2019 ஆந் திகதியன்று ருகுணு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் நிறைவு வைபவத்தில் அனைத்து பல்கலைக்கழக விளையாட்டு விழாவிற்கான கொடியானது ருகுணு பல்கலைக்கழக உபவேந்தரினால் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் F.C.ராகல் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இதனையடுத்து கிழக்கிலங்கையின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமான கலை ஆற்றுகை நுண்கலைத்துறையினால் நிகழ்த்தப்பட்டிருந்தது. இக்கலாசார நிகழ்வை வடமோடி, தென்மோடி ஆட்டக்கோலங்களை மையப்படுத்தி படைப்பாக்கம் செய்து வடிவமைத்தவர் நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் ஆவார். அவருடன் விரிவுரையாளர்களான திரு.து.கௌரீஸ்வரன், திருமதி. துஷ்யந்தி சத்யஜித், உதவி விரிவுரையாளரான கு.கனிஸ்ரா ஆகியோரும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து வடமோடி, தென்மோடிக் கூத்து ஆட்டங்களுடன் பொருந்தியதொரு கலாசார நிகழ்வினை ஆற்றுகை செய்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தள அண்ணாவிமார்களான திரு.ப.கதிர்காமநாதன், திரு.சி.தீபன் ஆகியோர் வாசித்தனர்.

Taxonomy