Skip to main content

Department of Fine Arts.jpg

Nondi nadakam Thenmodikoothu

Nondi nadakam Thenmodi kooththu (A Traditional Performance of The Eastern Region) was produced by Department of Fine Arts and Staged at the night of 24.07.2019 at Mamankam Temple, Batticaloa.  This Kooththu was facilitated and Coordinated by Mr.S.Chandrakumar, Head/Fine Arts, Eastern University under his Learning by Performance Concept. Department of Fine Arts Students and Head of the Department Mr.S.Chandrakumar participated as actors in this Kooththu. Mr.S.Chandrakumar performed as a character of Nondi (Main Character of this Kooththu) in this Kooththu. This Kooththu annaviyar (Director of Koothu) was Mr.P.Kathikamanathan. 

 

நெண்டி நாடகம் தென்மோடிக் கூத்தின் அரங்கேற்ற விழா 24.07.2019 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடத்தப்பட்ட பாரம்பரிய அரங்க விழாவில் நடைபெற்றிருந்தது.

இக்கூத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் பொறுப்பாசிரியராக செயற்பட்டு, ஆற்றுகை மையம் கற்பித்திருந்தார். சு.சந்திரகுமாரே இக்கதையின் பிரதான கூத்தான (பாத்திரமான) நொண்டிக்கும், மாணவர்களான வி.கிருபானந்தம் செட்டிக்கும், ஜி.விலோஜினி செட்டிபெண்ணுக்கும், கோ.மயூரி கட்டியக்காரனுக்கும், பே.நிதாகர் தருமராசாவுக்கும், அ.நிவேதிகா தருமராசாவின் மனைவிக்கும், அ.சந்திரகுமார் மந்திரிக்கும், வி.விக்னேஸ்வரன் வேதாளம்  மற்றும் பொன்னக்கோனுக்கும், ச.கரீஸ்தரன் முனிவருக்கும், சு.சுஜாஜினி காளிக்கும், அ.பௌர்ஜா சொக்கனுக்கும், இ.சுலக்ஷனா மதுரக்கோனுக்கும், கு.நிலுஜா சின்னக்கோனுக்கும், நாடகசாலைப் பெண்களுக்கு சி.சிஜானியும் பு.ரதிகலாவும், தலையாரிமாருக்கு சு.சஞ்சீபன், கு.மதுசாந் ஆகியோரும் ஆடி தம் திறன்களை வெளிப்படுத்தி ஆற்றுகையாளர்களாக பங்குபற்றியிருந்தனர். அத்துடன் பே.சுஜாத்தா, நா.கேதீஸ்வரி, சி.சுந்தரலிங்கம் ஆகியோர் சபையோராக பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான வேட உடை ஒப்பனையை உதவி விரிவுரையாளர்களான திருமதி துஸ்யந்தி சத்தியஜித், திருமதி பிரசாந்தி இளங்கோ, செல்வி. ஞா.கபிலாசினி, செல்வி கு.கனிஸ்ரா ஆகியோரும் நுண்கலைத்துறை மாணவர்களான ச.மகிழினி, ர.சாந்தினி, த.கரன், இ.கிருபாகரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Taxonomy